வணக்கம் நட்பே...! * தங்கள் வருகை நல் வரவாகுக..!! * இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்..!!! சிறுகதைகள்: அவனும்... அவளும்...

Sunday, March 28, 2010

அவனும்... அவளும்...

(ஒரு பக்க சிறு 'கதை' முயற்சி. முயற்சி திருவினையாக்குமா என்பது உங்களது மதிப்புமிக்க கருத்தில்தான் உள்ளது.)


செல்பேசி ஒலிக்கவும் படித்துக் கொண்டிருந்த புத்தகத்தை வைத்துவிட்டு செல்பேசியை எடுத்துப் நம்பரைப் பார்த்தவன், "என்னடி இந்த நேரத்துல பண்ணுறே..?" என்றான்.

"சும்மாதாண்டா" என்றது எதிர்முனை பெண் குரல்.

"சும்மா பேச இதுவா நேரம்... நாளைக்கு எனக்கு செமினார் இருக்கு. அதுக்காக பிரிப்பேர் பண்ணிக்கிட்டு இருக்கேன். காலையில காலேஜ்ல பார்க்கலாம்..."

"நாளைக்கு உனக்கு செமினார் இல்லடா...."

"என்னடி சொல்றே... நீ என்னவோ பிஸிக்ஸ் புரபஸர் பாலுச்சாமி மாதிரி பேசுறே... உனக்கு ஹாஸ்டல்ல பொழுது போகலைங்கிறதுக்காக ராத்திரி ஒரு மணிக்கு போன் பண்ணி வெறுப்பேத்துறியா..?"

"உனக்கு நல்லது சொன்னா கேட்கமாட்டே... ராத்திரிப் பூராம் முழிச்சு பக்கம் பக்கமா எழுதிக்கிட்டு வா எனக்கென்ன..?"

"சரிடி... சொல்லித்தொலை... நாளைக்கு என்ன..?"

"நாளைக்கு பிகாம் பசங்க அவங்க புரபஸருக்கு எதிரா ஸ்டிரைக் பண்ணப் போறாங்களாம். எல்லா ஸ்டூடண்டஸும் கலந்துக்கணுமாம். அதனால நாளைக்கு காலேஜ் இருக்காது"

"இத உனக்கு இந்த நேரத்துல யாருடி சொன்னா..?"

"என் ரூம்மெட் சித்ரா இருக்கால்ல அவளோட ஆளு இப்பத்தான் போன் பண்ணி சொன்னான். ராத்திரி பனிரெண்டு மணிக்கு முச்சந்தியில கூடி முடிவு பண்ணிணாங்களாம். யாருக்கும் தெரியக்கூடாதாம்"

"என்னடி எதேதோ சொல்லுறே...? உண்மைதானா... நம்ப முடியலையே...?"

"நம்புனா நம்பு... எனக்கென்ன... எங்க பிரண்ட்ஸ் எல்லாம் படத்துக்குப் போகலாமுன்னு முடிவு பண்ணியிருக்காளுங்க... நீயும் எங்கூட வந்தியனா எனக்கு சந்தோஷமா இருக்கும்... அதனாலதான் போன் பண்ணினேன். நம்பலைன்னா ராத்திரி பூராம் பிரிபேர் பண்ணிட்டு காலையில வீட்டுல கிடந்து தூங்கு... எனக்கென்ன... எல்லாரும் அவ அவ பாய் பிரண்டோட வருவாளுங்க... நா மட்டும் ஒத்தையா போறேன்..." எதிர்முனை கோபப்படுவது போல் பேச...

"சரி... சரி... நாளைக்கு ஸ்டிரைக்தானே... காலையில நான் உன்னைய உங்க ஹாஸ்டல்கிட்ட வந்து பிக்கப் பண்ணிக்கிறேன்... ஓகே..."

"நீ காலேசுக்கிட்டயே வா... எல்லாரும் அங்க அசம்பிள் ஆகித்தான் போறாளுங்க...."

"சரிடி... தாங்க்ஸ்டி"

"சரி படுத்து தூங்கு குட் நைட்"

"ஒகே... சீ யூ டுமாரோ..."

போனை வைத்தவன் புத்தகத்தை தூக்கிப் போட்டான். \அப்பா நாளைக்கு செமினார் இல்லைன்னா அடுத்து ரெண்டு நாள் லீவு, அப்புறம் திங்கள்கிழமை செகண்ட் டே ஆர்டர்தான் பிஸிக்ஸ் கிளாஸ் இல்ல. இனி புதன் கிழமைதான்...

நாளைக்குப் பூராம் நம்ம ஆளுகூட என்சாய்தான்' என்று நினைத்தபடி படுக்கையில் விழுந்தான்.

அதே நேரம்...

அந்த தனியார் பெண்கள் விடுதியில்...

போனை வைத்த ஹரிணியிடம், "ஏண்டி அவங்கிட்ட இப்படி ஒரு பொய்யை அவிழ்த்துவிட்டே... பாவன்டி அவன்... நாளைக்கு பாலுச்சாமி சார்கிட்ட மாட்டப் போறான்..."

"மாட்டட்டும்... முண்டம்... சாயந்தரம்தான் அவங்கிட்ட சேலஞ் பண்ணினேன் அதுக்குள்ள மறந்துடுச்சு... நாளைக்கு எங்கூட சுத்தலாங்கிற சந்தோஷத்துல இந்நேரம் தூக்கம் வராம புரண்டுக்கிட்டு கிடக்கும் கிடக்கட்டும்..." என்றபடி எழுந்து காலண்டரில் தேதியை கிழித்தாள்.

அதில் ஏப்ரல் 1, வெள்ளிக்கிழமை என்று இருந்தது.
 
-'பரியன் வயல்' சே.குமார்.





33 comments:

ரோஸ்விக் said...

தேவகோட்டை கல்லூரி கதையா அண்ணே! :-)

Menaga Sathia said...

இதெல்லாம் காதல் படுத்தும் பாடு...என்ன இருந்தாலும் ஹரிணி செய்தது தப்பு அதுவும் படிப்பு விஷயத்தில்...

Madumitha said...

உங்கள் முயற்சியில்
வெற்றியடைந்துள்ளீர்கள்.
நல்ல கதை.

'பரிவை' சே.குமார் said...

என்னங்க... நாங்க படிக்கும் போது எங்கள் தேவகோட்டை கல்லூரியில் செமினார் எடுக்கச்சொல்லுற பேராசிரியர்கள் எங்கள் துறையில் இல்லை. அதுபோக கிராமத்துல இருந்து வந்த நமக்கெல்லாம் எப்படிங்க இதுபோல அமையும். ஆமா ரோஸ்விக் நாமளும் சிவகங்கை சீமைதானோ?

'பரிவை' சே.குமார் said...

அதுதான் காதல் படுத்தும்பாடு என்று சொல்லியாச்சே... அப்புறம் ஹரிணி மேல் கோபப்பட்டால் எப்படி திருமதி. மேனகா.

'பரிவை' சே.குமார் said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மதுமிதா.

பனித்துளி சங்கர் said...

என்ன ஒரு வில்லத்தனம் ? தீபாவ சொல்லலைங்க உங்களைத்தான் ,,,,ஹீரோவையே காமடியன் ஆகிடீங்க!!

துபாய் ராஜா said...

கன்னியர் கடைக்கண் காட்டிவிட்டால் காளையருக்கு கல்வியும் ஒரு பொருட்டா...

கதையும்,உரையாடல்களும் அருமை.

Thenammai Lakshmanan said...

துபாய் ராஜா சொன்னதை வழிமொழியிறேன் குமார்

கதை அருமை

'பரிவை' சே.குமார் said...

நன்றி தேனம்மை.

காரைக்குடி பயணம் எப்படி இருந்தது? வெயில் அதிகமா?

Anonymous said...

kalakrenganey..

supera vanthu eruku..

but oru paka kadhinu cholitenga..

konjam periya kadiya podunga.

valthukal chola vayathilai.
vasaganaga
epothum..


varuthapadatha
vasiphor
sangam sarbaga
complan surya

Senthil Kumar said...

மிகஉம் நன்றாக இருந்தது!

கயல் said...

அருமையா இருக்கு! வாழ்த்துக்கள்! வளருங்கள்! காரைக்குடி காரரா நீங்க! நம்மூர் காரவுக போல ஒரு வணக்கம் போட்டுக்க தாய்... வணக்கமுங்க! :))

பனித்துளி சங்கர் said...

மிகவும் ரசிக்கும் வகையில் சொல்லி இருக்கும் விதம் அருமை . பகிர்வுக்கு நன்றி !
தொடருங்கள் .......

Ahamed irshad said...

Very Good Twist.

Thenammai Lakshmanan said...

மிக அருமை குமார் நீங்க கம்பன் விழா இடுகை எல்லாம் படித்தீங்களா..
நல்லா இருக்கா

செந்தமிழ் செல்வி said...

சகோதரரே,
நல்ல கதை. படித்து முடித்ததுமே மனதுக்குள் என்னவோ நெருடுவது போல் இருக்கு. அது தான் கதையின் வெற்றிக்குக் காரணம்! தொடரட்டும் உங்கள் பயணம்!

சாமக்கோடங்கி said...

குத்துங்க எசமான் குத்துங்க.. இந்தப் பொண்ணுக எப்போதுமே இப்படித்தான்...

நன்றி..

Mathi said...

எல்லா பெண்களும் ஒரே மாதிரி தானோ என்று அஞ்ச வைக்கிறது...

அன்புடன்,
மதி...

'பரிவை' சே.குமார் said...

@ ♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

// என்ன ஒரு வில்லத்தனம் ? தீபாவ சொல்லலைங்க உங்களைத்தான்

,,,,ஹீரோவையே காமடியன் ஆகிடீங்க!!//

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சங்கர்.
இப்ப ஹீரோக்களெல்லாம் காமடியனாத்தானே இருக்காங்க.

'பரிவை' சே.குமார் said...

@ துபாய் ராஜா said...

// கன்னியர் கடைக்கண் காட்டிவிட்டால் காளையருக்கு கல்வியும் ஒரு

பொருட்டா...

கதையும்,உரையாடல்களும் அருமை.//

ஆமா... ஆமா... வேறென்ன வேண்டும்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ராஜா.

'பரிவை' சே.குமார் said...

@ thenammailakshmanan said...

//துபாய் ராஜா சொன்னதை வழிமொழியிறேன் குமார்

கதை அருமை.//

நன்றி தேனம்மை.

'பரிவை' சே.குமார் said...

@ Complan Surya said...

//kalakrenganey..

supera vanthu eruku..

but oru paka kadhinu cholitenga..

konjam periya kadiya podunga.

valthukal chola vayathilai.
vasaganaga
epothum..


varuthapadatha
vasiphor
sangam sarbaga
complan surya//

தங்கள் தொடர் வருகைக்கும் தோழமையான கருத்துக்கும் நன்றி

வி.வி.எஸ்.எஸ்.

'பரிவை' சே.குமார் said...

@ Senthil Kumar said...

//மிகஉம் நன்றாக இருந்தது!//
நன்றி செந்தில் வாழ்த்துக்கும் வருகைக்கும்..!

'பரிவை' சே.குமார் said...

@ கயல் said...

அருமையா இருக்கு! வாழ்த்துக்கள்! வளருங்கள்! காரைக்குடி காரரா நீங்க!

நம்மூர் காரவுக போல ஒரு வணக்கம் போட்டுக்க தாய்... வணக்கமுங்க! :))

நன்றி கயல் வருகைக்கும் வாழ்த்துக்கும்..!

அட இவுக நம்ம ஊருக்காரவுகள்ல... சந்தோஷமா இருக்குங்க.

'பரிவை' சே.குமார் said...

@ ♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

// மிகவும் ரசிக்கும் வகையில் சொல்லி இருக்கும் விதம் அருமை .

பகிர்வுக்கு நன்றி !
தொடருங்கள் .......//

ரசித்தமைக்கு நன்றி சங்கர்.

'பரிவை' சே.குமார் said...

@அஹமது இர்ஷாத் said...

// Very Good Twist.//

நன்றி இர்ஷாத்.

'பரிவை' சே.குமார் said...

@ thenammailakshmanan said...

//மிக அருமை குமார் நீங்க கம்பன் விழா இடுகை எல்லாம் படித்தீங்களா..
நல்லா இருக்கா.//

எல்லாம் படித்தேன். விரிவா ஒரு மடல் உங்களுக்கு பின்னூட்டமாக இடுகிறேன்.

'பரிவை' சே.குமார் said...

@ செந்தமிழ் செல்வி said...

//சகோதரரே,
நல்ல கதை. படித்து முடித்ததுமே மனதுக்குள் என்னவோ நெருடுவது போல்

இருக்கு. அது தான் கதையின் வெற்றிக்குக் காரணம்! தொடரட்டும் உங்கள்

பயணம்!//
நன்றி சகோதரி முதல் வருகைக்கும் முத்தான கருத்துக்கும்..!

'பரிவை' சே.குமார் said...

@ பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

//குத்துங்க எசமான் குத்துங்க.. இந்தப் பொண்ணுக எப்போதுமே

இப்படித்தான்...

நன்றி..//

நன்றி பிரகாஷ். பெரியவுங்க எல்லாம் வாழ்த்துறீங்க. ரொம்ப சந்தோஷமா

இருக்கு.

'பரிவை' சே.குமார் said...

@ Mathi said...

//எல்லா பெண்களும் ஒரே மாதிரி தானோ என்று அஞ்ச வைக்கிறது...

அன்புடன்,
மதி...//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. அப்படியில்லைங்க... நல்லவங்க

இருக்காங்க.

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

கவிதன் said...

கதை பிரமாதம்..... அருமையான படைப்பு சே.குமார் !!! வாழ்த்துக்கள்!