வணக்கம் நட்பே...! * தங்கள் வருகை நல் வரவாகுக..!! * இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்..!!! சிறுகதைகள்: மழலை இதயம்

Sunday, March 14, 2010

மழலை இதயம்


"அப்பா..."

"என்னம்மா"

"நம்ம தாத்தா பெர்த்டே எப்போ?"

"அதெல்லாம் யாருக்குத் தெரியும்..."

"ப்ளீஸ்ப்பா... சொல்லுங்க... தாத்தா பெர்த்டே எப்போ?" அழுத்தமாக கேட்டாள் சுவாதி.

"நிஜமாலுமே எனக்குத் தெரியாதுடா... தாத்தாவுக்கே தெரியாதும்மா"

"பொய் சொல்லாதேப்பா... எம் பெர்த்டே, தம்பி பெர்த்டே, அம்மா பெர்த்டே எல்லாம் கரெக்டா, மறக்காம வச்சிருக்கீங்க... தாத்தா பெர்த்டே மட்டும் தெரியாதுன்னா எப்புடிப்பா..?"

மழலையாக கேட்டாலும் மனதை தைத்தது. இதற்கு மேல் தெரியாது என்றால் இன்னும் என்னவெல்லாம் கேட்பாளோ என்ற பயத்தில் ஏப்ரல் இருபதுதான் தாத்தா பிறந்தநாள் என்று சட்டென்று மனதில் உதித்த நாளைச் சொல்லி அவளை அணைத்துக் கொண்டான் சிவா.

"ஐய்யா... இன்னைக்கு ஏப்ரல் 17, 18... 19... 20... விரல் விட்டு எண்ணி இன்னம் திரி டேய்ஸ்தான் இருக்கு தாத்தா பெர்த்டேக்கு... அப்பா சூப்பரா கொண்டாடலாம் தாத்தா பெர்த்டேய... ம்..."

"ஒ.கே".

ஏப்ரல்-20 காலை.

"அப்பா... நான் காலையிலயே தாத்தாவுக்கு விஷ் பண்ணிட்டேன். நீங்களும் அம்மாவும்தான் பண்ணலை... ஈவினிங் கேக் வாங்கிக்கிட்டு வாங்க..."

மறக்காமல் ஞாபகம் வைத்திருக்கிறாளே... என்று நினைத்தபடி "சரி... இப்ப ஸ்கூலுக்கு கிளம்பு பஸ் வர்ற நேரமாச்சு..." என்று அவளை விரட்டினான் சிவா.

மாலை 6.30 மணி.

சிவா வரும்போது வாசலில் அவன் வரவுக்காக கன்னத்தில் கைவைத்தபடி காத்திருந்தாள் அவனது மகள்.

"ஹை... அப்பா வந்தாச்சு..." அவனைப் பார்த்ததும் கைதட்டி சிரித்தாள்.

அவன் அலுவலக கோப்புகள் அடங்கிய சூட்கேஸை மட்டுமே சுமந்து வருவது கண்டு அவளது முகத்தில் சிரிப்பு அலை குறையத் தொடங்கியது.

"அப்பா..."

"என்னம்மா..." களைப்பாய் கேட்டான்.

"வாங்கலையா..."

"என்னது..?"

"தாத்தா பெர்த்டே கேக்..."

"சாரிடா... அப்பா ஆபிஸ் வேலையில மறந்துட்டேன்..."

"பொய் சொல்றீங்க... வண்டி பெட்டியில இருக்குதானே..."

"இல்லடா... நிஜமாலுமே மறந்துட்டேன்..."

"போங்கப்பா... எங்க பெர்த்டேக்கு மட்டும் மறக்காம பெரிய்ய கேக் வாங்காருவிங்க... நாங்க கேக்காம எல்லாம் வாங்காருவீங்க... தாத்தாவுக்கு மட்டும் எதுவுமே வாங்க மாட்டீங்க... தாத்தா கண்ணாடி மாத்தணும்முன்னு கேட்டப்போ இருக்கதைப் போடுங்க போதும்... அப்புறம் பாக்கலாம்ன்னு சொன்னீங்க. தாத்தா எதாவது கேட்டா அம்மாவும் செய்யிறதில்லை. நாங்க தப்பு செய்தாலும் தாத்தாவைத்தான் திட்டுறாங்க... நமக்கு எதாவதுன்னா தாத்தா துடிச்சுப் போயிடுறாங்க... ஆனா நீங்க அவங்களை ஏப்பா வெறுக்கிறீங்க... " என்று மழலை மாறாத குரலில் பெரிய மனுசிபோல் அவள் பேசிக் கொண்டே போக...

சிவாவின் மனதுக்குள் அவளது வார்த்தைகள் சுருக்கென்று தைத்தது. 'இவளை நாம் வளர்ப்பது போல்தானே அவர் நம்மை மாரிலும் தோளிலும் போட்டு வளர்த்திருப்பார். நமக்காக எத்தனை கஷ்டப்பட்டிருப்பார். கால ஓட்டத்தில் நாம் இவளது குழந்தைக்கு தாத்தாவாகும் போது நாம செய்வதன் கூலிதானே கிடைக்கும். சிறியவளாக இருந்தாலும் எப்படி பேசுகிறாள். தவறு செய்துவிட்டோமே... அவளின் ஆசையை நிறைவேற்றுவது சாதாரண விஷயம்தானே... அவருக்கும் என்னை விட்டால் யார் துணை... இத்தனை நாளாக ஏன் இப்படி இருந்தேன். சை... படித்தும் முட்டாளாய் இருந்திருக்கிறேன். அவளுக்கு இருக்கும் இதயம்கூட எனக்கில்லாமல் போச்சே...' என்று மனதிற்குள் தனது செயலை நினைத்து வருந்தியவன், மகளின் அருகே அமர்ந்து அவளை கைகளை பிடித்துக் கொண்டு "சாரிடா... அப்பா ஆபிஸ் வேலையில மறந்துட்டேன். வா நாம கடைக்குப் போய் கேக் வாங்கி வரலாம்" என்றான்.
 
'பரியன் வயல்' சே.குமார்




21 comments:

விக்னேஷ்வரி said...

நல்ல கருத்து.

Anonymous said...

simply superb

புலவன் புலிகேசி said...

ம்....நடக்கின்ற உண்மை

'பரிவை' சே.குமார் said...

@விக்னேஷ்வரி
//நல்ல கருத்து//

முதல் வருகைக்கும் முத்தான கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் said...

@பிரின்ஸ்காஜா
//simply superb//
முதல் வருகைக்கும் முத்தான கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் said...

@புலவன் புலிகேசி
//ம்.... நடக்கின்ற உண்மை//
ஆம் நண்பா... உண்மைகளில்தான் நிறைய கருக்கள் கிடைக்கின்றன.

'பரிவை' சே.குமார் said...

Hi shruvish,

Congrats!

Your story titled 'சிறுகதைகள்: மழலை இதயம்' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 14th March 2010 09:25:02 PM GMT



Here is the link to the story: http://www.tamilish.com/story/203704

Thank you for using Tamilish.com

Regards,
-Tamilish Team

பிரபல பதிவாக்கிய நண்பர்களுக்கும் வாய்ப்பளித்த தமிழிஷ்க்கும் நன்றிகள் பல.

Thenammai Lakshmanan said...

குழந்தைகள் நமக்கு சிலசமயம் ஆசான்கள்தான்.. மனதைத்தொட்ட கதை குமார்...

Menaga Sathia said...

super story!!

'பரிவை' சே.குமார் said...

ஆம் தேனம்மை குழந்தைகளிடம் நிறைய கற்கலாம்.

'பரிவை' சே.குமார் said...

முதல் வருகைக்கும் முத்தான கருத்துக்கும் நன்றி திருமதி. மேனகாஸாதியா.

Anonymous said...

KUMARANNA KUMAR ANNA

NEENGA PADIVARNUTHAN ENKU THIRIUM..

PRABALA PADIVARNU THIRIUM..

ANNAL ELUTHALAR APPDINU

ENTHA STORY PADITHA PIRAGUTHAN

PURINTHATHU..

engal v.v.s
varuthapadtha valibar sangam sarbaga...

"PILAI MANSU ELUTHALAR ENKIRA PATHAI ALITHU MAHILKIROM"

vaipu alithamiku
nandri..
NANDRI
complan surya
VALGA VALAMUDAN.
V.V.S SANGAM

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

அருமையான சிறுகதை..
மனதை தொடும் வண்ணம் உள்ளது..

'பரிவை' சே.குமார் said...

பட்டம் கொடுத்த காம்ப்ளான் சூரியாவுக்கு நன்றி.
நாங்க கல்லூரியில் படிக்கும் போது எங்கள் தசாவதாரக் குழுவி பெயர் உங்கள் குழுவிடம்.
நாம சாதாரண பதிவர்தான். எதோ எழுத்தின் மேல் உள்ள ஆர்வத்தால் அபுதாபியில் தனிமையிலும் அது தொடர்கிறது. அதுவே குடும்பப் பிரிவை சிறிதளவு மறக்க வைக்கும் மருந்தாக உள்ளது நண்பா. அவ்வளவுதான்.

நான் மிகவும் சாதாரணமானவன் மற்ற பதிவர்களுடன் ஒப்பிடும் போது...
நன்றி நான் இனி பட்டத்துடன்.... சாரி உங்கள் பட்டத்துடன்.

'பரிவை' சே.குமார் said...

நன்றி ஆனந்தி.
வாழ்த்துக்கும் வருகைக்கும்..!
தொடரட்டும் உங்கள் நட்பு.

Starjan (ஸ்டார்ஜன்) said...

அருமையான கதை..

பனித்துளி சங்கர் said...

அழகான சிந்திக்க வைத்துவிட்ட கதை!
நல்ல சிந்தனை.....தொடருங்கள் நண்பரே!!

'பரிவை' சே.குமார் said...

நன்றி ஸ்டார்ஜன்.


நன்றி பனித்துளி சங்கர்.

துபாய் ராஜா said...

நெகிழ்ச்சியான கதை.

'பரிவை' சே.குமார் said...

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி துபாய் ராஜா.

கண்மணி/kanmani said...

வாழ்த்துக்கள் குமார் இந்தக் கதையை இன்று சிறுவர் மலரில் வாசித்தேன்