வணக்கம் நட்பே...! * தங்கள் வருகை நல் வரவாகுக..!! * இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்..!!! சிறுகதைகள்: சிறுகதைப் போட்டிக் கதை: பார்வைகள்

Saturday, December 5, 2009

சிறுகதைப் போட்டிக் கதை: பார்வைகள்

செம்மொழிப் பைந்தமிழ் மன்றம் - சிறுகதைப் போட்டிக் கதை

குறிப்பு : ஒரு இளைஞன்... ஒரு இளம்பெண்... ஒரு ரயில்/பஸ் பயணம்... காதல்.
(படித்து பின்னூட்டம் இடுங்கள். மறவாமல் வாக்கும் அளியுங்கள்.)

சிறுகதைப் போட்டி நடத்தும் வலைத்தளம்: http://simpleblabla.blogspot.com



அரசு விரைவுப் பேருந்து திருச்சியிலிருந்து இராமேஸ்வரம் நோக்கி இருட்டைக் கிழித்துக் கொண்டு சென்று கொண்டிருந்தது. இரவு நேர பயணமாதலால் அதிக கூட்டமில்லை. சன்னல் அடைத்திருந்த போதும் மார்கழி மாதக் குளிர் பேருந்துக்குள் இருக்கத்தான் செய்தது. சேலைத்தலைப்பை இழுத்து மூடிக் கொண்டு சன்னலோரமாக அமர்ந்திருந்தேன்.

பேருந்துக்குள் ஆடியோ, வீடியோ இரண்டும் வேலை செய்யாததால் இருந்த பத்துப் பேரும் நிம்மதியாக இருந்தோம்.

பேருந்து ஓட்டுநர் நிறுத்தம் இல்லாத ஒரு இடத்தில் திடீரென பேருந்தை நிறுத்தினார். எதற்கு இங்கு நிறுத்துகிறார் என்று யோசிக்கும் போதே ஒரு இளைஞனும் யுவதியும் அவசர அவசரமாக ஏறினர். பேருந்து விளக்கில் அவர்களது முகம் சரிவரத் தெரியாவிட்டாலும் வீட்டை விட்டு ஓடிவந்த காதல் ஜோடி என்பது எனக்குப் புரிந்தது. அவர்கள் எனக்கு முன் இருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டனர்.


நடத்துனரிடம் இராமநாதபுரத்துக்கு பயணச்சீட்டு வாங்கினர். அந்தப் பெண் அவனது தோளில் சாய்ந்து கொண்டாள். அவர்களை பின்னால் இருந்து பார்த்தபோது அவனுக்கு இருபது வயசுக்குள் இருக்கும். அவளுக்கு பதினெட்டு நிரம்பியிருக்க வாய்ப்பில்லை. 'இந்த வயதில் காதல். இதுகளாலே வாழ்க்கை போராட்டத்துல வெல்லமுடியுமா? .' அவர்களது பேச்சு எனது சிந்தனையை கலைத்தது.

"எனக்குப் பயமாயிருக்கு..." அந்த யுவதி தோளில் சாய்ந்தபடி விசும்பலினூடே பேசினாள்.

"அசடு நான் இருக்கேன். எல்லாம் நான் பார்த்துக்கிறேன்..." .

'ம்... இவனுக்கிட்ட என்ன இருக்கு... எப்படி பார்ததுப்பான்' எனக்கு கோபம் வந்தது.

"இல்ல.. சித்திக்கு தெரிஞ்சா..."

"தெரிஞ்சா என்ன பண்ணமுடியும்..? யார் வந்தாலும் நான் பார்த்துக்கிறேன்..."

'அடேங்கப்பா... இவரு தமிழ் சினிமா கதாநாயகன் எத்தனை பேரு வந்தாலும் பறந்து பறந்து அடிச்சு விரட்டப் போறாரு. மூதேவி... இழுத்துக்கிட்டுப் போற பொண்ணுக்கு ஒருவேளை கஞ்சி ஊத்துமான்னு தெரியலை... இவரு பார்த்துப்பாராம்.' எனக்குள் கோபம் எரிமலையாய் கனன்றது.

"இல்லை... என்ன நடக்குமோன்னு எனக்குப் பயமா இருக்கு..."

அவன் அந்த யுவதியோட நெத்தியில முத்தமிட்டு "எதையும் நினைக்காம அப்படியே தூங்கு. எதாயிருந்தாலும் நாளை பார்த்துக்கலாம்." என்றபடி அணைத்துக் கொண்டான்.

எனக்கு அதற்கு மேல் பொறுமையில்லை. தம்பி என்று அந்தப் பையனை அழைத்தேன். அவனும் என்ன என்பது போல் திரும்பினான்.

"உனக்கு வயசு என்ன?"

"என்னோட வயசு உங்களுக்கு எதுக்கு மேடம்...?"

"சொல்லுப்பா..."

"பத்தொன்பது... ஏன்?"

"இரு... அவசரப்படாதே...படிக்கிறியா..."

"இல்லை..."

"ம்ம்... இவ படிக்கிறாளா...?

"ஆமா..."

"இந்த வயசுல வாழ்க்கையின்னாலே என்னன்னே தெரியாது. அப்புறம் எப்படி?"

"நீங்க என்ன சொல்லுறீங்கன்னு புரியலை..."

"புரியலையா... அதான் இழுத்துக்கிட்டு ஓடுறியே... குடும்பச்சுமையின்னா என்னன்னு தெரியுமா..?"

"இழுத்துக்கிட்டு ஓடுறேனா... என்ன சொல்லுறீங்க..."

"என்னப்பா புரியாத மாதிரி நடிக்கிறே... உன்னோட ஆசை தீரும் வரைக்காவது அவளை... "

"மேடம்..." அவனது கத்தலில் பேருந்துக்குள் இருந்த அனைவரும் எங்கள் பக்கம் திரும்பினர்.

"உண்மைய சொன்னா கத்துறே..." நானும் பதிலுக்கு கத்தினேன். அந்தப் பெண் எதுவும் பேசாமல் அமர்ந்திருந்தாள்.

"எதுங்க உண்மை... ஒரு பையனும் பொண்ணும் தனியா வந்தா காதலர்களாத்தான் இருக்கணுமா...?"

"காதலர்களா இல்லைன்னா நீங்க ஏன் இந்த நேரத்துல ஓடிவந்து ஏறணும்... அப்பா அம்மாவை மறந்து இவளுகளும் அரிப்பெடுத்து ஓடியாந்துடுறாளுங்க..." கோபத்தில் யோசிக்காமல் வார்த்தையை விட்டேன். அந்தப் பெண் அழ் ஆரம்பித்தாள்.

"இப்ப அழு... ஆத்தா அப்பன் மொகத்துல கரியை பூசிட்ட்டு..."

"பேச்சை நிறுத்துங்க மேடம். அப்புறம் மரியாதை கெட்டுடும். இவ யாரு தெரியுமா என் தங்கை... ஒரு பையனும் பொண்ணும் தனியா வந்தாளே காதலிக்கிறாங்கன்னு ஏன் நினைக்கிறீங்கன்னு தெரியலை. நீங்க மட்டும் இல்லை நாட்டுல முக்கால்வாசி பேர் அப்படித்தான் நினைக்கிறீங்க. அது ஏன்னே தெரியலை. தனியா வண்டியில போறது அண்ணன் தங்கையாக இருந்தாலும் உங்க பார்வைக்கு தப்பாத்தான் தெரியுது. அதனாலதான் இன்னைக்கு பெரும்பாலான அண்ணன் தங்கைகள் சேர்ந்து எங்கயும் போறதில்லை." சிறிது நிறுத்தியவன் மீண்டும் தொடர்ந்தான்.

"யாரையும் பர்ர்த்தவுடனே தப்பா எடை போடுறதை நிறுத்துங்க. எங்களுக்கு அம்மா இல்லை. அப்பா ரெண்டாம் கல்யாணம் பண்ணிக்கிட்டாரு. சித்தி எங்களுக்கு நல்லவங்களா அமையலை. எவ்வளவு கொடுமை பண்ண முடியுமோ அவ்வளவும் பண்ணிட்டாங்க. அப்பா எதுவும் கேட்கிறதில்லை. நான் படிக்கலை. ஆனா இவ நல்லா படிப்பா. இப்ப இவ படிப்ப கெடுத்து சித்தியோட சொந்தத்துல ஒரு குடிகாரனுக்கு கட்ட ஏற்பாடு நடக்குது. இவளை நல்லா படிக்க வைக்கணும். எங்க அம்மா செத்தப்புறம் எங்க அப்பா வேற கல்யாணம் பண்ணியதால மாமா வீட்டு உறவு அத்துப்போச்சு. இருந்தாலும் மாமா உதவுவருங்கிற நம்பிக்கை இருக்கு. அதனால அப்பா, சித்தி எல்லாம் பக்கத்து ஊருக்கு ஒரு விஷேசத்துக்கு போயிருக்கிறதால யாருக்கும் தெரியாம மாமா ஊருக்கு கிளம்பிட்டோம். "
அவனுக்கு கண்ணீர் வந்தது. அந்தப் பெண் தனது தாவணியால் துடைத்தாள்.

எலலோரும் என்னை புழுவைப்போல பார்த்தனர். எனக்கு என்னவோ போல் ஆகிவிட்டது. அந்தப் பையனின் கைகளை பிடித்துக் கொண்டு ' ஏனோ தெரியலை இந்த பார்வை நல்ல நோக்கததுல பார்க்கிறதை விட கெட்ட நோக்கத்துலதான் அதிகம் பார்க்குது. என்னை மன்னிச்சுடுப்பா... ' என்றேன்.



6 comments:

'பரிவை' சே.குமார் said...

நணபர் ராம்குமார் - அமுதன் அவர்களுக்கு...
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி. சில காரணங்களால் இடுகையை நீக்கி புதிதாய் இட நேர்ந்ததால் உங்கள் பின்னூட்டத்தை சேமித்து மீண்டும் இட நேர்ந்தது. மன்னிக்கவும். உங்கள் கருத்து இதோ...
ராம்குமார் - அமுதன் http://nellainanban.blogspot.com said...
wallaa irukkungka ungka kathai... pooddiyil veRRi peRa vaazththukkaL....

thamizhparavai said...

நல்லா இருக்குங்க... கொஞ்சம் இயல்பை மீறிய வசனங்களெனினும் நல்ல திருப்பம்...
வெற்றிபெற வாழ்த்துக்கள்...

செ.சரவணக்குமார் said...

ரொம்ப நல்லாயிருக்கு நண்பா. வெற்றி பெற வாழ்த்துக்கள்.

'பரிவை' சே.குமார் said...

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி நண்பரே...
கதைக்கான கரு உதித்தபோது சில இயல்பை மீறிய வசனங்கள் இருந்தால் நல்லா இருக்கும் என்ற யோசனைதான் சில இடங்களில்...
தங்களது இயல்பான கருத்துக்கு நன்றி...

'பரிவை' சே.குமார் said...

நண்பர் சரவணக்குமாருக்கு...
வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி ...

எனது வலைகளில் அடிக்கடி வலம் வருவதற்கும் நன்றி..!

'பரிவை' சே.குமார் said...

Hi shruvish,

Congrats!

Your story titled 'போட்டிக் கதை: பார்வைகள்' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 6th December 2009 04:32:02 AM GMT



Here is the link to the story: http://www.tamilish.com/story/148525

Thank you for using Tamilish.com

Regards,
-Tamilish Team

நன்றி தமிழிஷ் மற்றும் அதனை சுவாசிக்கும் உள்ளங்களே..!
வாக்களித்த அனைவருக்கும் மீண்டும் ஒருமுரை நன்றி..!

தோழமையுடன்,
சே.குமார்